ஆக்ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...
By Chandru
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் புதிய படம் ஆக்ஷன். ஹாலிவுட் பாணியில் இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்திருப்பதால் படத்துக்கும் ஆக்ஷன் என டைட்டில் வைத்து விட்டனர்.
துருக்கியில் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி படமாகியிருக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இவரும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசை. டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரித்துள்ளார். வரும் 15ம் படம் ரிலீஸ் ஆகிறது.
ஏற்கனவே திரைக்கு வந்த விஜய் உள்ளிட்ட படங்க ளுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் அதன்படி ரசிகர்கள் பேனர் கலாச்சாரத்தை கைவிட்டனர். அதுபோல் விஷாலும் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விட்டிருக்கிறார்.
ஆக்ஷன் படம் ரிலீஸ் ஆவதையொட்டி ரசிகர்கள் யாரும் பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம். அதற்கு ஆகும் செலவை ஏழை, எளியோர்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்த வேண்டும் என விஷாலின் மக்கள் நல இயக்கம் தெரிவித்துள்ளது.