துணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசா குத்தாட்ட நடிகை...

திருடா திருடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சாயா சிங், அப்படத்தில் தனுஷுடன் மன்மத ராசா.. மன்மத ராசா பாடலுக்கு அசத்தலான குத்தாடம் போட்டு கலக்கியவர். அதன்பிறகு கவிதை, ஜெயசூர்யா, அருள் போன்ற படங்களில் நடித்தார். அடுத்தடுத்து தமிழில் வாய்ப்பு இல்லாத நிலையில் கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இரவுக்கு ஆயிரம் கண்கள், பட்டினப்பாக்கம் படங்களில் நடித்தவர் தற்போது விஷால் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படத்தில் நடித்துள்ளார்.  சுந்தர்.சி. இயக்கியிருக்கிறார்.   வரும் 15ம் தேதி படம் வெளியாகும் நிலையில் பட புரமோஷன் நடந்து வருகிறது. படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரின் கதாபாத்திரம் பற்றியும் தினமும் டிவிட்டரில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சாயா சிங் கதாபாத்திரம் பற்றி தெரிவிக்கப் பட்டுள்ளது ஆர்கேஎஸ் என்ற கதாபாத்திரம் துணை முதல்வராக நடிக்க அவரது மனைவியாக சாயாசிங் நடிக்கிறார்.   ஆக்‌ஷன் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, ராம்கி, பழகருப்பையா நடித்திருக்கின்றனர்.
More News >>