நடிகர் டாக்டர் ராஜசேகர் விபத்தில் சிக்கினார்.. காரில் பலூன் விரிந்ததால் உயிர் தப்பினார்..
இதுதான்டா போலீஸ் படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்து பரபரப்பை உண்டாக்கியவர் டாக்டர் ராஜசேகர். அதன்பிறகு மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன் போன்ற படங்களில் நடித்தார். சில வருடங்களுக்கு முன் வெளியான விஷாலின் ஆம்பள படத்திலும் நடித்திருந்தார். ஆனாலும் ராஜசேகர் தெலுங்கு படங் களில் கவனம் செலுத்துகிறார். அம்மொழியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பிற்காக நேற்று விஜயவாடா சென்றிருந்தார் பின்னர் அங்கிருந்து தனது சொகுசு காரில் ஐதராபாத்துக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தார். பெத்த கோல்கண்டா அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் வந்தபோது கார் விபத்தில் சிக்கியது. இதில் சிறுகாயங்களுடன் ராஜசேகர் உயிர் தப்பினார். சொகுசு கார் விபத்தில் சிக்கியவுடன் அதிலிருந்த பலூன்கள் விரிந்து ராஜசேகரை பாதுகாத்ததால் அவர் பெரிய காயங்கள் இல்லாமல் தப்பினார்.
பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்தசம்பம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.