பாபி சிம்ஹா - ரேஷ்மி நட்சத்திர தம்பதிக்கு குவா குவா... ஒரே படத்தில் நடித்தபோது காதலித்து மணந்தவர்கள்..
நேரம், ஜிகர்தண்டா, உறுமீன், சாமி 2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா. தற்போது கமலின் இந்தியன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மி மேனனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். உறுமீன் இருவரும் சேர்ந்து நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 3 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டார் ரேஷ்மி.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேஷ்மிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். ஏற்கனவே இந்த ஜோடிக்கு மதுர சிம்ஹா என்ற 2 வயது மகள் இருக்கிறார்.