வெளியானது பிரபுதேவாவின் லக்zwnjஷ்மி டீசர்!
நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகியுள்ள 'லக்ஷ்மி' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ட்ரிடெண்ட் மற்றும் பிரமோத் மூவிஸ் இணைந்து வழங்கும் 'லக்ஷ்மி' திரைப்படத்தில் டீசர் வெளியாகியுள்ளது. முற்றிலும் நடனத்துக்கான ஒரு திரைப்படம் என்ற இணைப்பு வரியுடன் வெளியாகவுள்ள இப்படத்தில் நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநராக இருக்கும் பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ளார்.
இயக்குநர் விஜய் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக உள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிரவ் ஷா இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.