விஜய் 64 பட ஹீரோயினை நிராகரித்த மணிரத்னம்...?இவருக்கு என்ன குறை...
இயக்குனர் மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க உள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், நயன்தாரா என ஏராளமான நடசத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்திற்காக தேர்வான சத்யராஜ் படத்திலிருந்து அவராகவே விலகிவிட்டார். இப்படத்துக்காக ஏராளமான நட்சத்திரங்களை அழைத்து மேக்அப் டெஸ்ட் நடத்தப்பட்டது. அதில் பல நட்சத்திரங்கள் ரிஜெக்ட் செய்யப் பட்டனர்.
விஜய் 64 படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனனும் பொன்னியின் செல்வன் பட ஆடிஷனுக்கு சென்றிருந்தார். அவருக்கு மேக் அப் போட்டு பார்த்துவிட்டு திருப்தி இல்லை என்று அனுப்பிவிட்டார் களாம். அப்படத்தில் வாய்ப்பில்லாமல் வந்தவருக்கு தளபதி 64 கிடைத்ததில் மகிழ்ச்சி யாக உள்ளார். அதேபோல் லிசி, பிரியதர்ஷன் தம்பதியினரின் மகள் கல்யாணி. இவரும் மேக் அப் டெஸ்ட்டுக்கு அழைக்கப்பட்டு திருப்தி இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டராம். தற்போது சிவகாரத்திகேயன் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கிறார்.
மணிரத்னம் சில நடிகைகளை எதற்காக ரிஜெக்ட் செய்கிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அவர்களிடம் என்ன குறை கண்டார் என நெட்டிஸன்கள் மணிரத்னத் துக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.