தர்பார் படத்துக்கு ரஜினி டப்பிங் தொடக்கம்..அப்டேட் செய்த முருகதாஸ்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை முற்றிலுமாக கடந்த மாதம் முடித்துக்கொடுத்துவிட்டு இமயமலை சென்று திரும்பினார் ரஜினி. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளுக்கான வேலைகள் நடைபெற்றன.
தர்பார் பட டபபிங் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் ரசிகர்கள் யாரும் கேட்காமலே அப்டேட் கொடுத்திருக்கிறார். அதில் Thalaivarin Darbar Dubbing starts today அதாவது இன்று முதல் தர்பார் படத்துக்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசத் தொடங்கினார் என கூறி உள்ளார். அதைக்கேட்டு ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தர்பார் படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது.