அஜீத் விஸ்வாசம் டைட்டில் தெறிக்க விட்ட ரசிகர்கள்.. பதறிப்போன டிவிட்டர் நிர்வாகம்...
அஜீத், விஜய் ரசிகர்கள் அடிக்கடி ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்கள் தங்களின் மோதலை காரசாரமாக நடத்துகின்றனர். ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் இந்த மோதல் நடக்கிறது.
ஆனால் கடந்தமுறை இந்த மோதல் ரஜினிக்கும், அஜீத்துக்கும் இடையான மோத லாக மாறியது. அதாவது ரஜினி நடித்த பேட்ட படமும். அஜீத் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானதால் இந்த பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு படங்களும் போட்டி போட்டு வசூல் சாதனையை வெளியிட்ட நிலையில் இறுதியாக விஸ்வாசம் படம் அதிக வசூல் செய்ததாக உறுதியானது.
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் நேற்று ஒரு தகவலை வெளியிட்டது. அதில் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட டைட்டில் விஸ்வாசம் என்று தெரிவித்துள்ளது. அதைக் கண்டு தல ரசிகர்கள் உடனே துள்ளியெழுந்து அதை பிரபலப்படுத்த தொங்கிவிட்டனர்.
இந்தியாவிலேயே டிவிட்டரில் தல நடித்த விஸ்வாசம் பட டைட்டிலுக்குத்தான் முதலிடம் என்று கூறத் தொடங்கினார். அதையறிந்து டிவிட்டர் நிர்வாகம் அதிர்ச்சி யாகி ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
'இது 2019ம் ஆண்டு முழுவதுக்குமான லிஸ்ட் கிடையாது. முழுலிஸ்ட் என்ன என்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடுவோம்' என தெரிவித்துள்ளது.