வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா...புதிய காம்பினேஷனால் உற்சாகம்...
By Chandru
தனுஷ் நடித்த அசுரன் படத்தையடுத்து வெற்றி மாறன் இயக்கப்போகும் படம் பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்து அவர் நகைச்சுவை நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதை சூரியும் உறுதி செய்தார். இதுபற்றி சூரி கூறும்போது,'வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கப்போகிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. அவரது இயக்கத்தில் நடிக்க முடியுமா என்றுகூட எனக்கு தோன்றியது. இதுபற்றி சிவகார்த்தி கேயனிடம் கூறியபோது வாய்ப்பை தவற விடாதே கண்டிப்பாக நடி என்றார். அது நம்பிக்கை கொடுத்தது உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தில் நான் ஹீரோ இல்லை. கதையும், இயக்குனரும்தான் ஹீரோக்கள்' என்றார்.
சூரியின் படத்தை முடித்தவுடன் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க விருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
வெற்றிமாறன், சூர்யா கூட்டணி என்றவுடன் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கின்றனர். வெற்றிமாறன் படத்தை தவறவிட வேண்டாம் என்று அவரிடம் கூறி வருகின்றனர். மேலும் இந்த கதையை தனுஷுக்காக வெற்றிமாறன் தயாரித்திருந் தாராம் ஆனால் சூர்யாவை வைத்து இயக்குமாறு தனுஷ் கூறி அதை வெற்றி மாறனும் ஏற்றுக்கொண்டாராம்.
கமர்ஷியல் படங்களாகவே நடித்து நடிப்புக்கு தீனி போட முடியாமல் தவித்த வந்த சூர்யாவுக்கு வெற்றிமாறன் படம் செம தினியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.