சரித்திர படத்திலிருந்து அமலாபால் ரிஜெக்ட்...காரணம் என்ன தெரியுமா..?
By Chandru
சரித்திர படமாக பொன்னியின் செல்வன் இயக்க உள்ளார் மணிரத்னம். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் நடிக்கும் நடிகர்கள் கண்டிப்பாக நீண்ட முடி வளர்த்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டதால் நடிகர்கள் யாரும் சலூனுக்கு செல்வதை நிறுத்திவிட்டு ஜடா முடிபோல் தலைமுடி வளர்த்து வருகின்றனர்.
பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கவிருக்கும் இப்படத்தில் நடிக்க அமலாபாலும் நடிக்க விருந்தார். ஆனால் திடீரென்று அவர் தெலுங்கு ரீமேக் படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மணிரத்னம் படத்தில் நடிக்க தேர்வாகியிருந்த அமலாபாலை அப்படத்திலிருந்து நீக்கிவிட்ட தாக கூறப்படுகிறது. கால்ஷீட் காரணமாக அமலாபால் வெளியேறினார் என்று கூறப்பட் டாலும் தற்போதுள்ள அமலாபாலின் தோற்றம் கதாபாத்திரத்துக்கு பொருந்தமாக இருக்காது என மணிரத்னம் எண்ணியதால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.