தனிகாட்டு ராஜாவாக களமிறங்கிய விஷால்... 4 வது வார ரேஸில் பிகில், கைதி ...
நடிகர் விஷால் நடித்துள்ள ஆக்ஷன்', விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் இன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆக்ஷன் படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார். துருக்கியில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. தமன்னா. ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
அதுபோல் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி நடித்துள்ளனர். ஆனால் சில பிரச்னைகள் காரணமாக சங்கத்தமிழன் இன்று வெளியாகவில்லை.
சங்கத்தமிழன் திரைப்படம் ரிலீஸ் ஆகாததால், இந்த வாரம் விஷாலின்ஆக்ஷன் திரைப்படம் மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக இன்று (நவம்பர 15) ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த வாரம் முழுக்க ஆக்ஷன் அதிரடியாக வசூலை ஈட்டும் என்று பட தரப்பினர் கணித்திருக்கின்றனர். அதேசமயம் தீபாவளியையொட்டி வெளியான தளபதி விஜய்யின் பிகில்மற்றும் கார்த்தியின் கைதி 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
சங்கத்தமிழன் பிரச்னைகள் முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் அப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.