சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகவில்லை.. வருத்தத்தில் விஜய்சேதுபதி...
சங்கத்தமிழன் படத்துக்கு நேரம் சரியில்லையோ என்னவோ ஒவ்வொருமுறை ரிலீஸ் அறிவிக்கும்போதெல்லாம் தள்ளிவைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
தீபாவளியையொட்டி பிகில், கைதி வெளியான போதே சங்கத்தமிழன் படமும் ரிலீஸ் அறிவிக்கப்பட்டது. 3 படங்கள் மோதவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் நவம்பர் 15ம் தேதிக்கு சங்கத்தமிழன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
எல்லாம் முடிந்து இன்று 15ம் தேதிக்கு சங்கத்தமிழன் ரிலீஸுக்கு ரெடியானது. ஆனால் இன்றும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்படத்தை ரிலீஸ் செய்யும் லிப்ரா புரொடக்ஷன் ரவிச்சந்தின் தான் தயாரித்த நளனும் நந்தினியும் படத்திற்காக 15 லட்சம் ரூபாயை நெல்லை சேர்ந்த அன்பழகன் என்பவரிடம் வாங்கினாராம். பலமுறை கேட்டும் திருப்பிதரவில்லை. இதற்கிடையில் அன்பழகன் இறந்துவிட்டார்.
அவரது மகன் விக்னேஷ், தந்தை வழங்கிய கடனை திருப்பிதரும்படி ரவிச்சந்திரனிடம் கேட்டநிலையில காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் லிப்ரா புரொடக்ஷன் ரவிச்சந்திரன் சங்கத்தமிழன் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்த நிலையில் மகன் சார்பில் நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்த வரும் 21ம் தேதி வரை பட ரிலீஸுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் சங்கத்தமிழன் பட ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஒன்றிருக்கு இரண்டுமுறை தனது பட ரிலீஸ் தள்ளிப்போனதால் விஜய்சேதுபதி வருத்தத்தில் இருக்கிறாராம். பிரச்னைகள் தீர்ந்து ஓருசில நாளில் சங்கத்தமிழன் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.