மிக் போர் விமானம் விழுந்து தீப்பிடிப்பு.. 2 விமானிகள் தப்பினர்
கடற்படைக்கு சொந்தமான மிக் ரக போர் விமானம் இன்று கோவா அருகே கீழே விழுந்து எரிந்தது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் கீழே குதித்து தப்பினர்.
இந்திய கடற்படையில் மிக்29 ரக போர் விமானங்கள் இருக்கின்றன. இவை ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் நிறுத்தப்பட்டு, போரில் பயன்படுத்தப்படுகின்றன.
கோவா அருகே மிக்29 ரகத்தைச் சேர்ந்த மிக்29கே என்ற போர் விமானத்தில் கடற்படை விமானிகள் 2 பேர் இன்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென போர் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. அப்ேபாது 2 விமானிகளும் சரியான தருணத்தில் கீழே குதித்து உயிர் தப்பினர். விபத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. இது பற்றி விமானப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.