ரஜினியின் தர்பார் பிஸ்னஸ் சிக்கல்...அரசியலா என ரசிகர்கள் ஷாக்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து திரைக்கு வரவுள்ள படம் தர்பார்..  இதில்  யோகிபாபு, சுவேதா தாமஸ் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். பொங்கல் தினத்தில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்த நிலையில் ரஜினிகாந்த் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.  

இதற்கிடையே, தர்பார் படத்தின் பிஸ்னஸ் தொடங்கியிருக்கிறது. தமிழக விற்பனை விநியோக உரிமைக்காக  ரூ.80 கோடி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால்,  விநியோகஸ்தர்கள் அவ்வளவு பெரிய தொகையை கொடுத்து வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.  அதற்கு காரணம், கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூல்தான். அதையே அடிப்படையாக வைத்து தொகையை குறைக்க கோரி வருகிறார்கள்.

பேட்ட படத்தைவிட விஸ்வாசம் படம் கூடுதல் கலெக்‌ஷன் செய்திருந்தது. எனவே, தர்பார் படத்துக்கு தற்போது கூறப்படும் 80 கோடியை தர விநியோகஸ்தர்கள் விரும்பவில்லையாம். 70 கோடிக்கும் குறைவான தொகைக்கே படத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றார்களாம்.

இது வரை இல்லாத அளவுக்கு, ரஜினி படத்துக்கு இப்படியொரு பேரம் பேசும் நிலை வந்திருப்பதாக நெட்டில் தகவல் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விலை குறைத்து கேட்பதற்கு வசூல் மட்டும் காரணமா அல்லது அரசியல் சதுரங்க விளையாட்டு ஏதாவது நடக்கிறதா என்று கோலிவுட்டில் சிலர் முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது.

More News >>