இரவில் ரிலீஸ் ஆன சங்கத்தமிழன்...விஜய்சேதுபதி ரசிகர்கள் குஷி...

விஜய்சேதுபதி நடித்திருக்கும் படம் சங்கத்தமிழன். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய்சந்தர் இயக்கி உள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.   விவேக் மெர்வின் இசை அமைத்திருக்கிறார். இதில் நிவேதா பெதுராஜ், ராஷிகண்ணா நடித்துள்ளனர். மேலும் நாசர், சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.   சங்கத்தமிழன் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்னை காரணமாக படம் வெளியாகவில்லை. இப்படத்தை தயாரித்த நிறுவனம் ஏற்கனவே வீரம் படத்தை தயாரித்திருந்தது. அதில் விநியோகஸ்தருக்கு தரவேண்டிய பணம் பாக்கியிருந்தது.   அதனை தராததால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இரவு வரை இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. தர வேண்டிய பணத்தை திருப்பி தர பட நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து நேற்று இரவுகாட்சி முதல் சங்கத்தமிழன் திரையிடப்பட்டது. இரவில் படத்தை வெளியிடாதவர்கள் இ்ன்று காலை முதல் வெளியிட்டு வருகின்றனர். 
More News >>