கமல், அஜீத் படத்தில் நடிக்கவிருந்த வடிவேலு.. ரூ. 1 கோடி கேட்டு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்...

நடிகர் வடிவேலு கடைசியாக விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்கு பிறகு ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

சிம்புதேவன் இயக்குனர் பொறுப்பு ஏற்றிருந்தார். ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் வடிவேலுவுக்கும் பட தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டதையடுத்து அப்படத்தில் நடிக்காமல் ஒதுங்கினார் வடிவேலு. இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து புதிய படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2 வருடம் ஆகியும் வடிவேலு புதிய படத்தில் நடிக்க முடியவில்லை. ஒருவழியாக ஷங்கர் பட பிரச்னை பேசி தீர்வு காணப்பட்டதால் அவர் புதிய படங்களில் நடிப்பார் என்று கடந்த மாதம் தகவல் வெளியானது.

கமல்ஹாசன் புதிய படம் தலைவன் இருக்கிறான் புதியபடம், அஜீத் புதிய படம் வலிமை ஆகியவற்றின் மூலம் மீண்டும் வடிவேலு நடிக்க உள்ளார் என்றதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வடிவேலுவை ஆதாரமாக கொண்டு மீம்ஸ் போடும், மீம்ஸ் கிரியேட்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது அதற்கு ஆப்பு வைத்திருக்கிறாராம்  தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ்.

'நானும் நீயும் நடுவுல பேயும் படத்திற்காக வடிவேலுக்கு 1 கோடி முன்பணம் தரப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அவர் என்னிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகை 1 கோடியை திருப்பி தராவிட்டால் வடிவேலு நடிக்கும் வேறு படங்களை  வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் சுரேஷ் புகார் அளித்திருக்கிறாராம். இந்த புகாரால் கமல், அஜீத் படங்களில் வடிவேலு நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறதாம்.

More News >>