டிவியிலிருந்து சினிமாவுக்கு புரமோஷன் ஆகும் நடிகைகள்.. ரம்யா, டிடியை  தொடர்ந்து இப்போது பவி டீச்சர்..

தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வருபவர்கள் சமீபகாலமாக சினிமா நடிகைகளாக புரமோஷன் ஆகிக்கொண்டி ருக்கின்றனர். தனியார் டிவியில் நீண்ட நாட்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த டிடி என்கிற திவ்யதர்ஷினி, வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா  கோவா மற்றும் பவர்பாண்டி, சர்வம் தாள மயம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அதேபோல் டிவி தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன்  மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி மற்றும் மொழி, ஆடை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தளபதி 64 படத்தில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர் ஒன்றில் பவி டீச்சராக நடித்த பிரபலமான பிரிகிதா சாகா, தளபதி 64 படத்தில் நடிக்கிறார்.

டெல்லி சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தபின் லொகேஷனில் இருக்கும் படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் பிரிகிதா. தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் மாளவிகா மேனன் நாயகியாக நடிக்கிறார். விஜய்சேதுபதி, சாந்தனு பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.

More News >>