அழகு சிகிச்சையில் குஷ்பு...நடிகர்-டாக்டரிடம் ஆலோசனை
By Chandru
நடிகர் சந்தானத்தின் நண்பரான சேது. அழகு சீரமைப்பு டாக்டர் ஆவார். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா , சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்திருக்கிறார்.
சென்னையில் அழகியல் மருத்துவமனை நடத்தி வருகிறார். வெளிநாடு சென்று முகம் மற்றும் தோல் நிபுணருக்கான படிப்பை முடித்திருக்கிறார். இவரிடம் பல நடிகர், நடிகைகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சமீபத்தில் நடிகை குஷ்பு இவரிடம் அழகு சிகிச்சை பெறுவதற் கான ஆலோசனை பெற்றார். மேலும் குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து சமீபத்தில் விலகினார். முன்னதாக அவரைப்பற்றியும் அவரது மகள் பற்றியும் ஒரு சிலர் விமர்சனம் செய்திருந்தனர். அதற்கு குஷ்பு தக்க பதிலடி கொடுத்திருந்தார்.