ஹலோ மச்சான்ஸ் நடிகை வாய்ப்புக்காக புதுமுயற்சி...கவர்ச்சியில் கலக்க முடிவு...

'எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த், ஏய் படத்தில் சரத்குமார். இங்கிலிஷ்காரன் படத்தில் சத்யராஜ் போன்றவர்களுடன் நடித்தவர் நமீதா. அதிரடி கவர்ச்சி காட்டி நடித்து இளவட்டங்களை சுண்டி இழுத்த துடன் பார்க்கிற இடத்தில் எல்லாம் ரசிகர் களை மச்சான் என்று உறவு சொல்லி அழைத்து நெருக்கமானார். இந்த மவுசு அவரை நிறைய படங்களில் ஹீரோயினாக நடிக்க உதவியது. ஆனாலும் கட்டுப்பாடில்லாத உணவு அவரது வாய்ப்புகளை பறித்துவிட்டது. திடீரென்று உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் வேகமாக குறைந்தன. வாய்ப்பு வரும் என்று காத்திருந்து திருமணத் தை தள்ளிப்போட்டுவந்தவருக்கு வருடா வருடம் வயது கூடியது மிச்சம், பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. இதையடுத்து தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சவுத்ரியை திடீர் திருமணம் செய்துகொண்டார்.   திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நமீதா அதற்கேற்ப தனது உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டுவருகிறார். கடுமையான பயிற்சிகள் மூலம் வெயிட் குறைந்தவர் இறுக்கமான கவர்ச்சி உடைகள் அணிந்து இன்ஸ்டாகி ராமில் படங்கள் வெளியிட்டிருக்கிறார். கவர்ச்சி படங்கள் உலா வந்துவிட்டது படத்திலும் கவர்ச்சியாக தயாராகிவிட்டார், நமீதாவுக்கு பட வாய்ப்புகள் தேடி வருமா?  பாரக்கலாம்.
More News >>