ஷோலே இயக்குனருக்கு ரஜினிகாந்த் சல்யூட்...சூப்பர் ஸ்டார் ஆக்கியவரிடம் காலை தொட்டு ஆசி...

கமலின் 60 ஆண்டு திரையுலக சேவையை யொட்டி உங்கள் நான் நிகழ்ச்சி சென்னையில நடந்தது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். விழா வுக்கு வந்த ரஜினிகாந்த் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி நடந்து வந்தார். ஒரு இடத்தில் வந்ததும் ஜர்க் ஆகி நின்றவர் ஆச்சரியத்துடன் பார்த்தபடி அங்கிருந்த இயக்குனருக்கு சல்யூட் அடித்தார். பதிலுக்கு அந்த இயக்குனரும் சல்யூட் அடித்தார்.ரஜினியிடம் சல்யூட் வாங்கிய அந்த இயக்குனர் ரமேஷ் ஷிப்பி.   அமிதாப்பச்சன், தர்மேந்திரா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ஷோலே படத்தை இயக்கியவர்.  பின்னர் அவர் அருகில் சென்று கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.   அதேநேரம் 90களில் தனக்கு சூப்பர் ஹிட் படங்களாக அளித்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயர்த்திய இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை கண்டதும் அவரது காலை தொட்டு வணங்கினார் ரஜினி.
More News >>