தளபதி 64 கிளைமேக்ஸில் வரும் ஆயுதம் என்ன? லோகேஷ் கனகராஜிக்கு இயக்குனர் கேள்வி..
By Chandru
கார்த்தி நடித்த கைதி படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் 2ம் கட்டப்படப்பிடிப்பு நடந்து வரும் நிலையிலும் லோகேஷுக்கு கைதி படத்துக்கான பாராட்டு குவிந்த வண்ணமிருக்கிறது. வசூல் ரீதியாகவும் விஜய்யின் பிகிலை கைதி படம் சில இடங்களில் முந்தி இருக்கிறது. கைதி வெளியாகி 25 வது நாளை கடக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில் ''கைதி' படம் வெற்றிகரமாக 25வது நாள்.
இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும், ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி'' என தெரிவித்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆடை பட இயக்குனர் ரத்ன குமார், லோகேஷுக்கு ஒரு கேள்வி எழுப்பி டிவிட் செய்துள்ளார். 'தளபதி 64' கிளைமேக்ஸ்ல என்ன ஆயுதம் வரபோகு துனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்' என கேட்டிருக்கிறார். கைதி படத்தில் பல்வேறு ஆயுதங்களை ஆக்ஷன் காட்சிகளில் லோகேஷ் பயன்படுத்தியிருந்தார். அதையொட்டியே இப்படியொரு கேள்வியை ரத்னகுமார் கேட்டிருக்கிறாராம்.
மேலும் கூறும்போது,கொஞ்ச மாசமா #தளபதி 64 படத்தோட டைரக்டர் னு தான தெரியும். என்ன பண்ணிட்டு இங்க வந்தேன் னு தெரியாது ல. #கைதி சூர மாஸ்என தெரிவித்திருக்கிறார் ரத்னகுமார்.