நடிகர் வீட்டுக்கு தினமும் செல்லும் நஸ்ரியா... எதற்காக தெரியுமா...?
நய்யாண்டி, நேரம், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நஸ்ரியா மலையாள நடிகர் பஹத் பாசிலை மணந்து கொண்டு இல்லறத்தில் செட்டிலானார்.
அதன்பிறகு நீண்ட நாள் கழித்து நடிக்க வந்தாலும் ஒன்றிரண்டு படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். இந்நிலையில் நஸ்ரியா தினமும் நடிகர் துல்கர் சல்மான் வீட்டுக்கு செல்வது தெரியவந்துள்ளது. இதுபற்றி துல்கர் சல்மான் கூறியதாவது:
குழந்தைகள் பிளே ஸ்கூலுக்குபோவதுபோல் நஸ்ரியா தினமும் என் வீட்டுக்கு வந்துவிடுவார். அவரது கணவர் பஹத், காலையில் எனது வீட்டில் கொண்டு வந்து நஸ்ரியாவைவிட்டுவிட்டு மாலையில் வந்து அழைத்துச் செல்வார். நஸ்ரியாவும் என் மனைவி அமல் சுபியாவும் நெருங்கிய தோழிகள். ஷாப்பிங் சென்றாலும், தியேட்டருக்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்' என்றார்.
முன்னதாக துல்கர் பற்றி நஸ்ரியா கூறும்போது,'அவர் எனது அண்ணன் போன்றவர் அவரது மனைவி அமலும் நானும் நெருங்கிய தோழிகள்' என்றார்.