விதவை பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர்
விதவை பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் புவனேஷ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது 34). இவருக்கு, கடந்த 2011-ம் ஆண்டு முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு ஆண்டிலேயே முனீஸ்வரன் புற்று நோயால் பாதித்து உயிரிழந்தார்.
பிறகு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பவனேஷ்வரிக்கும், திருவண்ணாமலை நேதாஜி நகரை சேர்ந்த 21 வயதுடைய சந்துரு என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர், தன்னை விடவும் 13 வயது மூத்தவரான புவனேஷ்வரியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், புவனேஷ்வரியை திருமணம் செய்து கொள்வதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால், சந்துருவின் ஆசைக்கு எல்லாம் இணங்கி தன்னையே பறிகொடுத்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்துரு, அவரிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இந்நிலையில், ஓராண்டு முன்பு சந்துரு வேலைக்கு வான்மதியிடம் சொல்லிக் கொள்ளாமல் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து சந்துருவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறாய் என்று புவனேஷ்வரி கேட்டுள்ளார்.
ஆனால், சந்துரு புவனேஷ்வரியை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால், புவனேஷ்வரி மனம்ம் நொந்துள்ளார். இதனையடுத்து புவனேஷ்வரி, திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். சந்துரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.