கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு ஐகான் விருது..  மத்திய அமைச்சர்,  அமிதாப் இணைந்து வழங்கினர்..

சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் 50வது  பொன் விழா ஆண்டு கோவாவில் 20ம் தேதி (இன்று) தொடங்கியது. வரும்  நவ.28-ந்தேதி படவிழா நடக்கிறது.  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமை தாங்கினார்.  நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர்.

இவ்வழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி எனும் சிறப்பு விருது வழங்கப்பட் டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  நடிகர் அமிதாப்பச்சன் இணைந்து இவ் விருதினை ரஜினிகாந் துக்கு  வழங்கினார்கள். அப்போது அரங்கில் இருந்தவர் கள் கரவொலி எழுப்பி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ரஜினி பேசும்போது,  எனக்கு ஐகான் சிறப்பு  விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசாங்கத்துக்கு  நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் . இவ்விருதினை இயக்குனர்கள்,   தொழில்நுட்ப கலைஞர்கள்,  தயாரிப் பாளர்கள், ரசிகர்கள், என்னை வாழவைத்த தெய்வங் களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பித்துக்கொள் கிறேன் எனக் குறிப்பிட்டார்.

திரைப்பட விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200 திரைப் படங்கள் திரையிடப்படுகின்றன. பார்த்திபனின்  இயக்கி நடித்த ஒத்த செருப்பு. நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் இயக்கிய  ஹவுஸ் ஓனர்  படங்கள் மற்றும் இந்தி படங்கள் கல்லிபாய், சூப்பர் 30, பதாய் ஹோ, உரி:சர்ஜிக்கல் ஸ்டிரைக்  உள்ளிட்ட   26 இந்திய படங்களும், இதில் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விழாவை இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து நடத்துகின்றன. 

More News >>