சின்ன மச்சான், செவத்த மச்சான் நடிகையின் காதலன் யார் தெரியுமா?

பேய் கதையாக உருவான டார்லிங் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. சமீபத்தில் சார்ளி சாப்ளின் 2ம் பாகத்தில் பிரபுதேவாவுடன் ஜோடியாக நடித்த நிக்கி, அப்படத்தில் இடம்பெற்ற, சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடலுக்கு சூப்பர் நடனம் ஆடி அசத்தினார். இதையடுத்து சசிகுமார் ஜோடியாக  புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார்.   நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என வரிசையாக பிரபல நடிகைகளின் திருமணம் நடப்பது என்று தகவல்கள் வந்த வண்ணமிருக்கிறது. அதுபோல் ஒரு கேள்வி நிக்கியிடம் கேட்கப்பட்டது. நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா, எப்போது கல்யாணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டதற்கு ஒளிவுமறைவு இல்லாமல் பதில் அளித்தார்  'சென்னையை சேர்ந்த ஒருவரை நான் காதலிக்கிறேன். இருவரும் 3 வருடத்திற்கு பிறகு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம்.  காதலன் யார், என்ன வேலை செய்கிறார் என்பதுபற்றியெல்லாம் இப்போது கூற முடியாது' என தெரிவித்தார் நிக்கி கல்ராணி. நிக்கி கல்ராணி தன்னைபற்றிய காதல் கிசுகிசுவை பரப்புவதற்காக இப்படி சொன்னாரா அல்லது உண்மையிலேயே அவருக்கு காதலன் இருக்கிறாரா என்ற விவாதம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
More News >>