நகுல் நடிப்பில் செய் டீசர்!
நடிகர் நகுல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடித்து வெளிவரவிருக்கும் 'செய்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது.
ட்ரெண்ட் மியூசிக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'செய்' திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. கதாநாயகனாக நடிகர் நகுல், கதாநாயகியாக ஆஞ்சல் முஞ்சல், மற்றும் குணசித்திர வேடங்களில் நடிகர்கள் நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜேஷ் கே. ராமன் திரைக்கதையில் ராஜ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்ப்டத்தை டிரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
என்.வொய்.எக்ஸ்.லோபஸ் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் டீசர் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. 'செய்' திரைப்ப்டம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.