பாரத் பெட்ரோலிய நிறுவனம் தனியாருக்கு போகிறது.. 4 நிறுவன பங்குகள் விற்பனை
பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள 53.29 சதவீத பங்குகளும் தனியாருக்கு விற்கப்பட உள்ளது. மேலும் 4 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளும் விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று(நவ.20) டெல்லியில் நடைபெற்றது. இதில், பொதுத் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷனில் (பிபிசிஎல்), மத்திய அரசுக்கு உள்ள 53.29 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள 63.75 சதவீத பங்குகளில் 53.75 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதே போல், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசின் 54.80 சதவீத பங்குகளில் 30.9 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ள நிலையில், வருவாயை உயா்த்தும் நோக்கத்துடன் அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்தி நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.