தங்கப் பறவைகளை விற்பனை செய்வதா? பிரியங்கா காந்தி எதிர்ப்பு

மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், தங்கப் பறவைகள். அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என்று பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மத்திய அரசின் நிறுவனங்களை முழுமையாக தனியாருக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இதன்பின், பாரத் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் விற்பனைக்கு மத்திய அமைச்சரவை நேற்று(நவ.20) ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் நமது நாட்டின் பெருமைகள். அவை தங்கப் பறவைகள். நாட்டை புதுப்பித்து கட்டுவதாக பாஜக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.

ஆனால், பொதுத் துறை நிறுவனங்களை நட்டமாக்கி, அவற்றை விற்கும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறது. இது வருத்தமான விஷயம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>