மதுபான விலையை உயர்த்த முடிவு குடிமகன்கள் அதிருப்தி
தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் விலை உயர்த்த தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை [11-10-17] தலைமைச் செயலகத்தில் கூடியது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுபான விலையை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் வருவாயை உயர்த்தும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 180 மி.லி. கொண்ட மதுபான விலை ரூ12ம், பீர் பாட்டிலின் விலை ரூ.5ம் உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்து குடிமகன்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சரிசரியான மதுபாட்டில்களின் விலை சாதரணமாக ரூ.140இல் இருந்து ரூ.170 வரை விற்கப்படுகிறது. மேலும், மதுபான கூடங்களில் விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ள விலையை விட பீர் வகை பாட்டில்களுக்கு ரூ.10ம், ஆல்கஹால் அதிகளவுள்ள பாட்டில்களுக்கு ரூ.5ம் வசூலித்து வருகின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விலையேற்றம் தங்களின் வருமானத்திற்குள் செலவிட முடியாத நிலை ஏற்படும் என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.