ஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..
"பாகுபலி'முதல் மற்றும் 2ம் பாகம் இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு 2 வருடம் தனது அடுத்த படத்துக்கான ஆய்வில் இருந்தார். பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய அல்லுரி சீதாராமராஜு, கோமரம் பீம் வாழ்க்கையை மையமாக வைத்து கதை உருவாக்கி உள்ளார்.
1920-களில் காலக்கட்டத் தில் நடப்பது போன்று காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளது. ஆர் ஆர் ஆர் என பெயரிட்டிருக்கும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ராம் சரணுக்கு ஜோடியாக இந்தி நடிகை அலியா பட் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை டைசியும் நடிக்கவிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில் அவர் படத்திலிருந்து விலகுவதாக தெரிவித் தார். புதிய நடிகை தேர்வு மற்றும் வில்லன்கள் தேர்வும் நடந்து வந்தது. அதற்காக ஹாலிவுட் நட்சத்திரங்களை ராஜமவுலி தேடிக்கொண்டி ருந்தார். தற்போது அதற்கான தேர்வு நடந்து முடிந்துள்ளது. அவர்கள் யார் என்பதையும் இயக்குனர் அறிவித்திருக்கிறார்.
ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோர்ரிஸ் நடிக்கிறார். ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தை ஏற்கிறார்.
எ வியூ டு கில், பிரதர், டிவிஷன் 19, டெம்டேஷன் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த அலிசன் டூடி வில்லியாகவும் மற்றும் அவுட் போஸ்ட், டைவர்ஜென்ட், பிக் கேம், கோல்ட் ஸ்கின், ஆக்ஸிடன்ட் மேன் படங் களில் நடித்த ரே ஸ்டீவென்சன் வில்லனாக வும் நடிக்க தேர்வாகி உள்ளனர். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கும் ஆர் ஆர்ஆர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகி றது. 2020 ஜூலை 30ம் தேதி படம் வெளியாக உள்ளது.