தனுஷின், எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்.. படத்தின் சிறப்பம்சங்கள் 24ல் வெளியீடு..
By Chandru
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'.
இப்படம் முடிந்து திரைக்கு வருதாக பலமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஏதோவொரு காரணத்தால் தள்ளிப்போனது. தற்போது இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தின் சிறப்பம்சங்கள் பற்றி வரும் 24ம் தேதி வெளியாகும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ஜீவா நடிக்கும் சீறு, கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன். சிவா நடிக்கும் சுமோ ஆகிய படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படங்கள் பற்றிய ஸ்பெஷல் அறிவிப்புகளையும் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடுகிறது.
ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த 'கோமாளி', ஆர்ஜே பாலாஜி நடித்த 'எல்கேஜி' படங்கள் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.