நடிகர்கள் அருண் விஜய், விஜய் ஆண்டனி முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் அக்னிச் சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர் கூடம் படத்தை இயக்கியவர்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் கதாபாத்திரத் தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சீனு என்ற பாத்திரத்தில் ஹிப்பி ஸ்டைலில் நீண்ட முடி வளர்த்து மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு ஆக்ஷன் ஹீரோ லுக் வந்திருப்பதாக ரசிகர்கள் கமென்ட் பகிர்கின்றனர்.
இதுவரை விஜய் ஆண்டனி தனது படங்களில் மென்மையான நடிப்பையே கையாண்டு வந்திருக்கிறார். இதில் அதற்கு நேர்மாறாக சர்பரைஸ் தருவார் என்கிறது படக்குழு.சீனு தோற்றம் தவிர மற்றொரு கெட்டப் பிலும் விஜய் ஆண்டனி இதில் நடிக்கவிருக்கிறார்.
பட அதிபர் டி. சிவா தயாரிக்கும் இதில் அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துள்ளது. மேலும் கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.