பார்ட்டி கொண்டாடிய தல அஜீத் மனைவி ஷாலினி... பேபியாக நடித்தவருக்கு 40 வயசு ஆயிடுச்சு..

சிவாஜி, ரஜினி என டாப் நட்சத்திரங்களுடன்  குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஷாலினி, பின்னர் பருவ மங்கையாக விஜய், அஜீத், மாதவன் போன்றவர்களுடன் கதாநாயகியாக நடித்தார். அஜீத்குமாருடன் அமர்க்களம் படத்தில் ஷாலினி  இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. முறைப்படி குடும்பத்தினர் கலந்துபேசி திருமணத்தை நடத்தி வைத்தனர்.   திருமணத்துக்கு பிறகு ஷாலினி நடிப்புக்கு முழுக்குபோட்டு அனுஷ்கா, ஆத்விக்  என இரண்டு பிள்ளைகளுக்கு தாய் ஆகிவிட்டார். ஆனாலும் வலைதளம் மூலம் தனது ரசிகர் களுடன் உரையாடி வருகிறார். ஷாலினிக்கு நேற்று 40வது தொடங்கியது.   தனது பிறந்த நாளை பார்ட்டி ஹாலில் கேக் வெட்டி கொண்டாடினார். குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டு அவருக்கு பரிசுகளை அள்ளி குவித்தனர்.
More News >>