100 பட குறிக்கோளுடன் இருக்கும் நடிகை சாதிப்பாரா, மூட்டை கட்டுவாரா?
ஹீரோக்கள் 100 படங்களில் நடிப்பதை சாதனையாக கருதுகிறார்கள். ஒரு சில ஹீரோயின்கள் அந்த எண்ணிக்கையை நெருங்குவதற்குள் கல்யாணம், குடும்பம், குழந்தை என்று மூட்டை கட்டிவிடுகிறார்கள்.
10 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்திருக்கும் காஜல் அகர்வாலுக்கு 100 படங்களில் நடிப்பதுதான் குறிகோள் என்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
திரையுலகில் 10 வருடங்களாக நடித்து வருகிறேன். இன்றைக்கும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. 50 படங்களை கடந்துவிட்டேன் 100 படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள்.
திரையுலகில் எனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவம் சவால்களை தைரியமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சக்தியை கொடுத் திருக்கிறது. இன்றைக்கும் நான் எந்த படத்தில் நடித்தாலும் அதை எனது முதல் படமாக எண்ணியே நடிக்கிறேன். அதனால்தான் என்னால் முழுஈடுபாடு காட்ட முடிகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக் கிறேன். கன்னடத்தில் நடிக்காமலிருந் தேன். தற்போது அந்த வாய்ப்பு வந்திருக் கிறது. நடிகர் உபேந்திரா ஹீரோவாக நடிக்கும் கப்சா என்ற படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறேன். நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இப்படத்தை 7 மொழியி்ல் வெளியிடவிருக்கிறார்கள்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
முயண்ரால் முடியாத்து இல்லை ஆனால் பொறுமையுடன் 100 படம் சாதிப்பரா? அதற்குள் மூட்டை கட்டுவாரா என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.