ஜெ வாழ்க்கை படத்தில்  நடிக்க மறுத்த பிரபல ஹீரோ. காரணம் என்ன?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை  படத்தை, தலைவி என்ற பெயரில் ஏ.எல். விஜய் இயக்குகிறார்.  ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத்தில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் வேடமும் பிரதானமாக இடம்பெறுகிறது. எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.

படத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் இடம்பெறுகிறது. மறைந்த ஆந்திர முதல்வர் என்டிராமராவ் கதாபாத்திரமும் இப்படத்தில் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்டிராமராவ் பேரன் ஜூனியர் என்டிஆரை நடிக்க வைக்க கால்ஷீட் கேட்டனர். அவர் நடிக்க மறுத்ததுடன் என்டி ராமராவ் போல் யாராலும் நடிக்க முடியாது என்று கூறி அனுப்பி விட்டாராம்.

ஜூனியர் என்டிஆர் தற்போது ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் என்ற படத்தில் மற்றொரு ஹீரோ ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் என்டிராமராவ் வாழ்க்கை வரலாறு படம் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியானது அதில் என்டி.ராமராவ் மகன் என்டி.பாலகிருஷ்ணா நடித்திருந்தார். அப்படத்தின் 2ம் பாகமும் உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கூட ஜூனியர் என்டிஆர் நடிக்க மறுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More News >>