காதல் தோல்வியால் 12 மாத்திரைகள் சாப்பிடும் இலியானா.. பதற்றத்தில் ஆழ்ந்த நடிகை...

நடிகை இலியானாவை ஞாபகம் இருக்கிறதா? நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர். முன்னதாக கேடி என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில் அவர் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித் தார். ஏற்கனவே தெலுங்கு படங்களி்ல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார்  திடீரென்று பாலிவுட் மோகம் ஏற்பட்டு இந்தி படங்களில் நடிக்க சென்றார்.  முதல்படம் சூப்பர் ஹிட்டான லும் அங்குள்ள ஹீரோயின்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறினார். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பட வாய்ப்புகள் வந்தது.

இதையடுத்து பாலிவுட் திரையுலகினரின் கவனத்தை கவரும் வகையில் கவர்ச்சியாக பேசிப்பார்த்தார் எடுபடவில்லை. பின்னர் ஆஸ்திரேலியா பாய்பிரண்ட் ஆண்ட்ரூவை காதலித்து அவருடன் பல இடங்களில் டேட்டிங் என்ற பெயரில் சுற்றி வந்தார். அதெல்லாம் செய்தியாக வந்ததே தவிர பட வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை. வருடக்கணக்கில் கூடவே சுற்றி வந்த பாய்பிரண்டையும் அவருட னான காதலையும் திடீரென்று முறித்துக் கொண்டார் இலியானா.

இந்த பிரிவு இலியானாவை உணர்வு ரீதியாக பாதித்தது. மனஉளைச்சலில் ஆழ்ந்தவர் அதற்காக சிகிச்சை மேற் கொண்டார்.  டென்ஷன், மனஉளைச்சலிலிருந்து மீள்வதற்காக தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்டாராம். இதில் அவரது உடல் எடை அதிகரித்தது.

உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு சென்றார் இலியானா. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டு உடல் எடை குறைந்தார். தற்போது ஜிம்மிற்கு செல்வதை நிறுத்திவிட்டராம். இந்நிலை யில் அவர் நடித்துள்ள 'பகல்பந்தி' 'தி பிக் புல்' ஆகிய 2  இந்தி படத்தில் திரைக்கு வரவுள்ளது. அப்படங்கள் வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றத்தில் தற்போது இலியானா ஆழ்ந்திருக்கிறார்.

More News >>