ஜனவரி 1-ல். ”தளபதி 64” டைட்டில் அறிவிப்பு.. பட்டியலிலிருந்து 2 தலைப்புகள் லீக்..

'தளபதி 64'  படப்பிடிப்பு டெல்லியில் உள்ள கல்லூரியில் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்களுடன் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். 2 கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் ருசிகரமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு டைட்டில் வைக்கும் பணியும் கூடவே நடந்து வருகிறது. டாக்டர் படிப்பு, கேங்ஸ்டர், அண்டர் வேர்ல்டு தாதா, மாணவர்கள் பிரச்னை என பல்வேறு திருப்பங்களுடன் கதை அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான டைட்டில் குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.   மொத்தம் 5 டைட்டில்கள் இதற்காக பட்டியலிடப் பட்டு அதில் பொருத்தமான டைட்டிலை தேர்வு செய்யப்பட உள்ளது. அதில் டாக்டர் என்று ஒரு தலைப்பும். சம்பவம் என்ற ஒரு தலைப்பும் இடம்பெற்றிருப்ப தாக கூறப்படுகிறது. அநேகமாக இப்படத்துக்கு சம்பவம் என்ற தலைப்பை வைக்கவே பலரும் விருப்பம் தெரிவிப் பதாக தெரிகிறது.   வரும் புத்தாண்டு தினத்தில் ஜனவரி 1ம் தேதி  தளபதி ரசிகர்களுக்கு இனிப்பு செய்தியாக படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மேனன், சாந்தனு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
More News >>