ராதிகா, துருவ் விக்ரமுக்கு நோட்டீஸ்.. அதிகளவில் புகைப்பிடிக்கும் காட்சி..
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த இப்படம் இளவட்டங்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆதித்ய வர்மா படத்தில் புகை பிடிக்கும் காட்சியும் மது அருந்தும் காட்சியும் அதிகளவில் இருப்பதாக சர்ச்சை எழுந் துள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனரிடம் இருந்து பட தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
அதிகப்படியான மது அருந்தும் காட்சி, புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் ஹீரோ துருவ்வுக்கு நோட்டீஸில் தெரிவிக்கப் பட்டிருக்கிறதாம்.
ஆரவ் ஹீரோவாக நடிக்க அவரது தாயாக ராதிகா நடித்திருக்கும் படம் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்'. இதில் ராதிகா சுருட்டு பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கும் பொது சுகாதாரதுறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இரண்டு படங்களுக்கும் புகைப்பிடித்தல், மது அருந்தும் காட்சிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும் அந்த காட்சிகளை யாரும் குறைத்ததுபோல் தெரியவில்லை என்கின்றது திரையுலக வட்டாரம்.