தல அஜீத் ஜோடியாக நடிக்க மறுத்த ஹீரோயின்.. காரணம் என்ன தெரியுமா..?
By Chandru
தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் என்.வினோத். போனிகபூர் தயாரித்திருந்தார். இதே கூட்டணி இணைந்து அடுத்து ”வலிமை” படத்தை உருவாக்குகிறது.
அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற பேச்சு, படத்துக்கு பூஜை போடப்பட்டதிலிருந்தே தொடங்கிவிட்டது. வித்யாபாலன் தொடங்கி நஸ்ரியா வரை பெயர்கள் அடிபட்படன. அதெல்லாமே பிசுபிசுத்தப்போனது. நஸ்ரியா, தனிப்பட்ட முறையில், தான் வலிமை படத்தில் நடிக்க அழைக்கப்படவில்லை என்று வெளிப்படையாகவே கூறினார்.
இந்நிலையில்தான் நயன்தாரா பேச்சு தொடங்கியது. அதற்கேற்ப அமெரிக்காவில் நயன்தாராவை :வலிமை” பட தயாரிப்பாளர் போனிகபூர் சந்தித்து பேசினார். அப்போது அஜீத் ஜோடியாக நடிக்க கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. நயன்தாராவும் அதற்கு சம்மதித்திருக்கிறாராம். முன்னதாக பாலிவுட் நடிகை ஒருவரை அஜீத் ஜோடியாக நடிக்க அணுகியதும் தற்போது தெரியவந்திருக்கிறது.
பிரியங்கா சோப்ராவின் தங்கை பரிணிதி சோப்ரா. அவரிடம் ”வலிமை” படத்திற்காக போனிகபூர் கால்ஷீட் கேட்டபோது பேட்மின் டன் வீராங்கனை சாய்னா வாழ்க்கை சரித்திர படத்தில் நடித்து வருவதால் ”வலிமை” படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க இயலாது என்று கூறிவிட்டாராம்.
இதையடுத்தே நயன்தாரா கால்ஷீட் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்ட தாம். நயன்தாரா ”வலிமை”யில் அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பதுபற்றி இன்னும் பட தரப்பிலிருந்து உறுதிபடுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.