நடிகையை மணந்தாரா யோகிபாபு.. தீயாக பரவிய தகவல்..

திரையுலகில் ஹீரோக்களின் ஆதிக்கம்போல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காமெடி நடிகரின்  ஆதிக்கமும் இருந்து வருகிறது. கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு காலகட்டங்கள் முடிந்து,  தற்போது யோகிபாபு காலம்தான் யோக காலமாகி விட்டது.  நகைச்சுவை வேடங்களில் அவர்தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

அவர் முகத்தை சுளித்து தும்மல் போட்டாலும் அந்த தகவல் சட்டென நெட்டில் பரவுகிறது. சமீபத்தில் யோகிபாபு,  நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக கிசுகிசு பரவியது. சும்மா பரவினால் கூடபரவாயில்லை. நடிகையுடன் நெருக்கமாக ஒரு புகைப்படமும் வெளியானது.  அந்த நடிகை சபிதாராய். இந்த படத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த புகைப்படச் செய்தி களைகட்டி பறந்த நிலையில்,  சபிதாராய் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், யோகிபாபுவுடன் கன்னிராசி என்ற படத்தில் யோகிபாபுவுடன் 2017ம் ஆண்டு  நடித்தேன். அப்போது  அவருடன் செல்பி படம் எடுத்துக் கொண்டேன். 2 வருஷத்துக்கு பிறகு அதையே யாரோ திருமண படம் என்று கூறி வெளியிட்டுள்ளனர். இதுவொரு வதந்தி,  அதற்கு இவ்வளவு முக்கியத்துவமா கொடுப்பது? யோகிபாபு என் நண்பர், எனக்கும் யோகிபாபுவுக்கும் திருமணம் நடந்ததாக கூறுவது முழுக்க முழுக்க பொய்யான தகவல். இதை யாரும் தயவு செய்து நம்ப வேண்டாம், ப்ளீர்.. என தெரிவித்திருக்கிறார்.

More News >>