டெல்லியில் முடியும் தளபதி 64 படப்பிடிப்பு.. சென்னையில் 3ம் கட்ட ஷூட்டிங்...
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சுமார் கடந்த ஒரு மாதமாக இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. விஜய்யுடன் ஹீரோயின் மாளவிகா மேனன், சாந்தனு உள்பட பலர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
டெல்லியில் நடந்து வரும் 2ம் கட்ட படப் பிடிப்பு இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் முடிவடைய உள்ளது. பிறகு சென்னையில் 3ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதில் விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாகவிருக்கிறதாம்.
இதற்கிடையில் இப்படத்துக்காக இசையமைப்பாளர் அனிருத் சம்பவம் டைட்டிலில் ஒரு பாடல் இசை அமைத்து முடித்ததாக தகவல் வெளியானது. மேலும் படத்துக்கும் சம்பவம் என டைட்டில் வைக்கப்படும் என தகவல் பரவியது. ஆனால் சம்பவம் என்று இதுவரை படத்துக்கு டைட்டில் வைக்கப்படவில்லை என்று பட தரப்பு கூறுகிறது. அடுத்த ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் இப்படம் வெளியாகும் என்று தெரிகிறது.