நட்சத்திர கூட்டத்துக்கு விருந்தளித்த மெகா ஸ்டார்.. பிரதாப் போத்தன் வருத்தம்..
By Chandru
25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஐதராபாத்தில் மிகப் பெரிய மாளிகையை கட்டிய சிரஞ்சீவி அந்த வீட்டுக்கு குடியேறினார். இந்நிலையில் 80களில் திரையுலகில் தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகளை அழைத்து விருந்து வைத்தார்.
இதில் பாக்யராஜ், சரத்குமார், மோகன்லால், நாகார்ஜூனா, ஜாக்கி ஷெராப், ஜெயராம், ரகுமான், ஜெகபதி பாபு. சுரேஷ், வெங்கடேஷ், பிரபு, நடிகைகள் ராதிகா, அம்பிகா, ராதா, ரேவதி, நதியா, அமலா குஷ்பு என பலர் கலந்துகொண்டனர்.
ஒரே பாணியில் கோல்ட் அண்ட் பிளாக் நிறத்தில் உடை அணிந்து அனைவரும் பங்கேற்றனர். மகிழ்ச்சி கொண்டாட்டமாக அமைந்த இந்த விழாவில் பங்கேற்க தன்னை அழைக்கவில்லையே என நடிகர் பிரதாப் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
மூடு பனி, பன்னீர் புஷ்பங்கள் போன்ற படங்களில் நடித்ததுடன் கமல் நடித்த வெற்றி விழா, சத்யராஜ் நடித்த ஜீவா, கார்த்திக் நடித்த லக்கிமேன், ராம்கிநடித்த் ஆத்மா போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். சிரஞ்சீவி அழைக்காததுகுறித்து பிரதாப் கூறும்போது, '1980களில் நடித்த நடிகர்களில் நான் மோசமான நடிகராகவும், இயக்குனராகவும் இருந்திருக்கலாம். அதனால்தான் என்னை அவர்கள் அழைக்கவில்லை என எண்ணுகி றேன். எனக்கு இது வருத்தம்தான்' என்றார்.