இந்தியில் பேசச்சொல்லி டாப்ஸியிடம் சத்தம் போட்ட நபர்.. தில்லாக மறுத்து பேசிய நடிகை..
By Chandru
கோவாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் நடிகை டாப்ஸி. அங்கு நடந்த கூட்டத்தில் பேசும்போது, ஆங்கிலத்தில் பேசினார். அப்போது ஒருவர் டாப்ஸியை பார்த்து. 'இந்தி நடிகையாக இருந்து கொண்டு ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள், இந்தியில் பேசுங்கள்' என்றார்.
இதனால் டென்ஷன் ஆன டாப்ஸி அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அங்கு அமந்தி ருந்தவர்களிடம், ' உங்கள் எல்லோருக்கும் இந்தி தெரியுமா?' என்றார். அதற்கு பெரும் பாலானேனார் 'தெரியாது' என்றனர்.
பிறகு டாப்ஸி, 'நான் இந்தி நடிகை மட்டும் இல்லை, தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு படங்க ளிலும் நடித்துள்ளேன். எனவே நான் தமிழில் பேசவா' என கேள்வி கேட்ட நபரிடம் திருப்பிக்கேட்டார். அவர் மவுனமாக அமர்ந்தார்.