அயோத்தி வழக்கில் சீராய்வு மனு.. முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு..
அயோத்தி வழக்கில் டிசம்பர் முதல் வாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும், அயோத்தியில் வேறொரு பகுதியில் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்நி்லையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. சன்னி வக்பு வாரியம் எடுத்த முடிவு, எங்கள் உரிமையை பாதிக்காது. முஸ்லிம் அமைப்புகள் எல்லாமே ஒரே கருத்தைத்தான் கொண்டிருக்கின்றன என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.