சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்திலிருந்து, 'சும்மா கிழி..' என்ற பாடல் இன்று (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
ரஜினியின் அறிமுகமாக பாடலாக தர்பாரில் இடம் பெறும் சும்மா கிழி பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். இப்பாடலிலிருந்து சில வரிகளை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.
நெருப்புப் பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுபாரு -சும்மா கிழி
கருப்பு தோலோடசிங்கம் வரும் ஸ்சீனோடஎடமே பத்திக்கும் அந்தமாரி..போன்ற பட்டய கிளப்பும் ரகத்தில் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இப்பாடாலை பாடிய எஸ்.பி.பி பற்றி அனிருத் கூறும்போது,'வருடங்கள் கடந்துபோகலாம் இந்த (எஸ்.பி.பி)சாதனையாளர் தரும் எனர்ஜி மட்டுமே எல்லாவற்றுக்கும் உந்துதலாக இருக்கிறது. அதற்காக நன்றி எஸ்பிபி சார் என குறிப்பிட்டிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் மற்றும் அனிருத் ரசிகர்கள் அதிக அளவில் ரீட்வீட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் தர்பார் படத்தின் ஒளிப்பதிவுவை சந்தோஷ் சிவன் செய்திருக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.