எலிமினேஷன் உண்டா? - கமலை வம்புக்கு இழுக்கு நடிகை கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

நேற்று அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்தை தொடர்ந்து, மீனவர்களுடன் சந்திப்பு, பரமக்குடியில் பொதுகூட்டம் என தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த நடிகர் கமல்ஹாசன் மாலை மதுரையில் நடைபெற்றத்தில் தனது கட்சிக் கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை வெளியிட்டார்.

ஆனால், நடிகை கஸ்தூரி கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முன்னதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்த நடிகை கஸ்தூரி, “சினேகன், வையாபுரி, ஸ்ரீபிரியா, விஜய் டிவி மகேந்திரன் என மொத்த பிக் பாஸ் டீமும் இறங்கியிருக்கு. விவோ தான் பிரதான ஸ்பான்ஸரா? எலிமினேஷன் கூட வரும்ல?” என கிண்டல் செய்திருந்தார்.

இந்நிலையில், அடுத்த பதிவு ஒன்றில், “எனக்கு ஒரு அய்யம்.... அது என்ன மய்யம்? மையம் வேற, மய்யம் நா வேற போல.

சரி, அத்த வுடு. ம-ய்-ய-ம் இங்கிலீசுல MA-Y-YA-M தானே? MaiAm மைஅம் னு வருது....” என கேள்வி எழுப்பியுள்ளார்.

More News >>