தற்கொலை செய்த நடிகர் வாழ்க்கை படமாகிறது? இளம் நடிகர் அலறல்...
By Chandru
யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் நடித்திருப்பவர் சந்தீப் கிஷன். தெலுங்கு படங்களில் இளம் நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர். தற்கொலை செய்து கொண்ட நடிகர் ஒருவரின் வாழ்க்கை கதையில் சந்தீப் நடிப்பதாக கடந்த சில நாட்கள் தகவல் பரவி வருகிறது.
பொய், பெண்சிங்கம், வம்புச் சண்டை போன்ற படங்களில் நடித்திருப்பவர் உதய்கிரண் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு பைனான்ஸ் பிரச்னை காரணமாக தற்கொலை கொண்டதாக தெரிகிறது. உதய்கிரணின் வாழ்க்கையை படமாக்க உள்ளதாகவும் அதில் சந்தீப் கிஷன் நடிக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்து சந்தீப் ஷாக் ஆனார்.அவர் கூறும்போது,'உதய்கிரண் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பதாக கூறுவது வெறும் வதந்தி. என்றும், எந்த வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கும் எண்ணம் இல்லை. உதய்கிரண் வாழ்க்கை படத்தில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை' என்றார் சந்தீப் கிஷன்.