மாதவிடாய் பிரச்சனையால் 5 வயது சிறுமி படும் வேதனை!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் சிறுமி எமிலி தனது 4ஆம் வயதிலேயே மாதவிடாய் பிரச்சனையை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 5 வயது சிறுமி எமிலி டோவர். இவர் தனது நான்காம் வயதிலேயே மாதவிடாய் பிரச்சனையை சந்தித்து வருகிறார். இவர், பிறக்கும் போது சாதாரணமான குழந்தையை போன்றே பிறந்துள்ளார். ஆனால், பிறந்த இரண்டாவது வாரத்திலேயே இவர் அசாதாரண வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளார்.
4ஆம் மாதத்திலேயே ஒரு வயது குழந்தை அடையும் வளர்ச்சியை அடைந்துள்ளார். இரண்டு வயதாகும் போதே அவளது மார்பகங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், முகத்தில் முகப்பருக்கள் போன்ற வியாதிகள் தோன்றிவது கண்டறியப்பட்டுள்ளது.
அவரது பிறப்புறுப்பு அசாதாரண திசு வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் அவர் விரைவிலேயே பூப்பெய்தியுள்ளார். மேலும், இவர் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, உணர்திறன் செயலாக்க கோளாறு மற்றும் கவலை கோளாறு ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ளார்.
இவருக்கு 5ஆம் வயதிற்கு தேவையான ஹார்மோன்களை அட்ரீனல் சுரப்பிகள் சுரக்கவில்லை. இவரது உடல் தன்மை அந்த வயதுடைய மற்ற சிறுமிகளிடம் இருந்து வேறுபட்டு இருந்ததாக அவரது தாயார் டாம் டோவர் கூறியுள்ளார். இவரின் இந்த அசுர வளர்ச்சியை அவரால் புரிந்துகொள்ள முடியாமல் தவித்துள்ளார்.
தொடர்ச்சியான வலி காரணமாக அவர் வாராவாரம் பிசியோதெரபி டாக்டர்களிடம் சென்றுள்ளார். தற்போதைய ஐந்தாம் வயதில் அவர் மாதாவிடாய் பிரச்சனையை சந்தித்து வருகிறார். மாதவிடாய் பிரச்சனை காரணமாக, அவர் 50 வயது பெண்களை போன்ற முகத்தை பெற்றுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவரது தாயார் டாம் டோவர், “இன்னமும் கூட அவள் சிறு குழந்தையாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாதாவிடாய் காலத்தில் பெண்கள் அணியும் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவது அவள் கற்றறிந்து வருகிறாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனது மகளின் மருத்துவ செலவீனங்களுக்காக எண்ணற்ற அளவில் பெருந்தொகையை செலவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.