நீரவ் மோடி மோசடியை தொடர்ந்து 18 ஆயிரம் ஊழியர்கள் அதிரடி மாற்றம்

வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 700 கோடி அளவிற்கு மோசடி செய்தததை அடுத்து, 18 ஆயிரம் ஊழியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 700 கோடி அளவிற்கு மோசடி செய்தது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் நேசனல் வங்கியின் பொது மேலாளர் பொறுப்புக்கு இணையான அதிகாரி ராஜேஷ் ஜிந்தாலையும் சிபிஐ கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தது.

இந்நிலையில் பஞ்சாப் நேசனல் வங்கியின் 18 ஆயிரம் ஊழியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய புலனாய்வு ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், 18 ஆயிரம் பேரையும் கடந்த 72 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்து, வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

More News >>