பிரியமான நடிகை பெயரை பச்சை குத்திய நிக்கி கல்ராணி.. காதலன் என்னவானார்?

எனக்கு ஒரு காதலர் இருக்கிறார். அவர் சென்னையில் இருக்கிறார். அவர் பெயரை இப்போது சொல்ல மாட்டேன். 3 வருடம் கழித்து எனது திருமணம் நடக்கும் என்று நடிகை நிக்கி கல்ராணி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தனத முதுகின் இடது புறம் ஒரு பச்சை குத்தியிருக்கிறார்.  இது யாருடைய பெயராக இருக்கும் என்ற சந்தேகத்துடன் அவரிடம் கேட்டபோது பதில் அளித்தார்.

முதுகில் வரைந்திருக்கும் டாட்டூவில் அர்ச்சனா என்று பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இது எனது அக்காவின் நிஜப்பெயர் என்றார். நிக்கி தனது அக்கா அர்ச்சனா என்று கூறியிருப்பவர் வேறுயாரு மல்ல தமிழில் காதல் செய்வீர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த சஞ்சனாதான். இவர் தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். 

எனக்கொரு காதலன் இருக்கிறார் என்று கூறிய நிக்கி அவரது பெயரை பச்சை குத்தாமல் அக்காவின் பெயரை குத்தியிருப்பது ஏன்? அப்படியொன்றால் காதலன் என்னவானார் என்று நெட்டிஸன்கள் நிக்கியிடம் தமாஷாக கேட்டுள்ளனர்.

நிக்கியை பொறுத்தவரை தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஹர ஹர மஹா தேவகி, கலகலப்பு 2, சார்ளி சாப்லி 2, தேவ், கீ போன்ற படங்களில் நடித்துள்ள நிக்கி அடுத்து வலிமை, ராஜவம்சம் படங்களில் நடிக்க உள்ளார்.

More News >>